நடிகர் விஷால் தற்போது ஆதிக் ரவிச்சதிரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி என்ற படத்தில் நடித்துவருகிறார். விஷாலின் 33 வது படமாக உருவாகும் இப் படத்தில் அவருடன் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன்,ரிது வர்மா, சுனில் உள்ளிட்டோர் நடித்துவருகின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
இந்நிலையில் நடிகர் விஷால் கேரளா செல்ல முடிவெடுத்திருக்கிறார். அதாவது அவருக்கு ஏற்கனவே உடலில் சில பிரச்னைகள் இருப்பதாக கூறப்படுகிறது. அதனை சரி செய்வதற்காக கேரளா செல்லும் அவர் அங்கு ஒரு மாதம் தங்கியிருந்து ஆயுர்வேத சிகிச்சயை எடுக்கவிருக்கிறாராம். அந்த சிகிச்சையை முடித்த பிறகுதான் மார்க் ஆண்டனி பட்த்துக்கு டப்பிங்கும் கொடுக்கவிருக்கிறாராம். அவர் மார்க் ஆண்டனிக்கு அடுத்ததாக ஹரி இயக்கத்தில் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே லத்தி திரைப்படத்தின் படப்பிடிப்பில் இரண்டு முறை காயமடைந்து விஷால் சிகிச்சை எடுத்துக் கொண்டார். மேலும்,கல்குவாரி ஒன்றில் நடந்த மார்க் ஆன்டனி படப்பிடிப்பில் சண்டைக்காட்சியின் போது எதிர்பாராத விதமாக விஷாலுக்கு கால் முட்டியில் பலத்த அடிபட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை அண்ணா நகர் பகுதியில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் நடிகர் விஷாலுக்கு சிகிச்சை எடுத்துக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கேரளாவில் ஒரு மாதம் தங்கியிருந்து ஆயுர்வேத சிகிச்சையை மேற்கொள்ள உள்ளாராம்.