சந்திரமுகி படத்தை தொடர்ந்து,பி.வாசு சந்திரமுகி 2 படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்தில், ராகவா லாரன்சுடன் இணைந்து கங்கனா ரணாவத், ராதிகா, வடிவேலு உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
.இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது.இந்நிலையில், இப்படத்தில் நடித்து வரும் ராதிகாசரத்குமாருக்கு, அப்படத்தின் நாயகன் ராகவா லாரன்ஸ் தங்க மோதிரம் மற்றும் விலையுயர்ந்த கைகடிகாரம் ஒன்றையும் பரிசளித்துள்ளார்.
இதுதொடர்பாக ராதிகா சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் , ”லைகா புரொடக்ஷனில் சந்திரமுகி 2 படத்தில் நடிப்பது மகிழ்ச்சி.
பி.வாசு போன்ற ஒரு இயக்குனருடன் அவரது கைவினை மற்றும் தொலைநோக்கு பார்வையுடன் பணிபுரிவது எவ்வளவு மகிழ்ச்சி அளிக்கிறது.
ராகவா லாரன்ஸூக்கு நன்றி, எனக்கு ஒரு தங்க மோதிரம் மற்றும் விலையுயர்ந்த கடிகாரம் பரிசளித்த முதல் ஹீரோ இவர், உண்மையான பாசம்,” என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.