குரங்கு பொம்மை, மண்டேலா உள்ளிட்ட படங்களின் இயக்குனர் மடோனா அஷ்வின்’ இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் புதிய படம், ‘மாவீரன்’.
இதில்,சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடிக்க, இவர்களுடன் நடிகை சரிதா, யோகி பாபு, சுனில், இயக்குநர் மிஸ்கின், ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ள நிலையில், இப்படம் வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் ஆகஸ்ட் மாதம் அதே தேதியில் வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியானதால், மாவீரன் படகுழு, அப் படத்தின் வெளியீட்டு தேதியை ஜூலை 14 ஆம் தேதிக்கு தள்ளி வைத்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், மாவீரன் படத்தின் டப்பிங்கை சிவகார்த்திகேயன் தொடங்கி உள்ளார். இதுகுறித்து மாவீரன் படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த வீடியோவில், சிவகார்த்திகேயன் வீரமே ஜெயம் என்று டப்பிங்கை பேசி உள்ளார்.இவ்வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது .