மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் தொல்லை விவகாரம்!-கொந்தளிக்கும் இயக்குனர் பா.ரஞ்சித்.
உத்தரபிரதேசத்தை சார்ந்த பாஜக எம் பி யும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ்பூஷன் சரண்சிங் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், மனரீதியாக துன்புறுத்தியதாகவும், இந்திய மல்யுத்த வீராங்கனைகள் குற்றம் சாட்டியதுடன் தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தி வந்தனர்.
கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக வீராங்கனைகள் போராடி வந்த நிலையில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அவர்கள் ஆதரவாக குரல் எழுப்பினர். கடந்த 28ஆம் தேதி மல்யுத்த வீரர்கள் டெல்லியில் இருந்து போலீஸாரால் குண்டு கட்டாக அப்புறப்படுத்தப்பட்டன .இதனால் தாங்கள் பெற்ற பதக்கங்களை கங்கை நதியில் வீசப்போவதாக அறிவித்து போராட்டத்தில் இறங்கினர்.
இந்நிலையில் இயக்குனர் பா.ரஞ்சித் ட்விட்டர் பக்கத்தில், உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் மூவர்ண கொடியை ஏற்றிய சாம்பியன்கள் எந்த விதமான கண்ணியமும் , மரியாதையும் இல்லாமல் நடத்தப்பட்டுள்ளனர்.
வெற்றியாளர்கள் தங்கள் பதக்கங்களை ஆற்றில் வீசும் முடிவுக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது தொடர்பாக அரசு பதிலளிக்காதது வெக்கக்கேடானது. மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ்பூஷன் சரண் சிங்கை பதவியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.