கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் அம்பரீஷ்இவர் நடிகை சுமலதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு . அபிஷேக் என்ற மகன் உள்ளார். நடிகர் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பரான அம்பரீஷ்,மக்களவை உறுப்பினராகவும், கர்நாடக் மாநிலத்தின் அமைச்சராகவும் பதவி வகித்தவர்.நடிகர் அம்பரீஷ் கடந்த 2018ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
நடிகை சுமலதா தற்போது மண்டியா தொகுதி எம்.பி யாக உள்ளார்.அம்பரீஷ்-சுமலதா தம்பதியின் மகன் அபிஷேக்கும் தற்போது கன்னட திரையுலகின் இளம் நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார்.
இந்நிலையில்,நடிகர் அபிஷேக் அம்பரீஷ் தனது நீண்ட நாள் காதலி மற்றும் பிரபல ஆடை வடிவமைப்பாளருமான அவிவாவை கவுடா பாரம்பரியப்படி திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் இன்று காலை 9:30 மணி அளவில் பெங்களூரில் உள்ள சாம்ரவஜ்ரா அரண்மனை மைதானத்தில் வெகு விமரிசையாக நடந்தது.
இந்த திருமணத்தில்,முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, நடிகர் ரஜினிகாந்த், தெலுங்கு நடிகர் மோகன்பாபு,கன்னட திரையுலகத்தின் முன்னணி ஹீரோவான யஷ்,நடிகை சுஹாசினி மணிரத்னம் , மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் மனைவி அஸ்வினி, தெலுங்கு நடிகர் மோகன் பாபு, முன்னாள் கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே உள்பட ஏராளமான சினிமா மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.