சமீபத்தில் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில்வெளியான படம் ‘இராவண கோட்டம்’. இப்படத்தில்,சாந்தனு ‘கயல்’ ஆனந்தி, பிரபு, இளவரசு, தீபா சங்கர், அருள்தாஸ் உள்ளிட்ட நடித்திருந்தனர் இப்படத்தை கண்ணன் ரவி தயாரித்திருந்தார்.
தென்மாவட்டங்களில் நிலவும் சாதிய அரசியலையும், கருவேல மரத்தினால் ஏற்படும் பாதிப்புகளையும் பேசிய இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது..
இப்படம் வரும் ஜூன் 16-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் இப்படம் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்சல்மேர் மாநகரத்தில் நடைபெற்ற ஜெய்சல்மேர் பன்னாட்டு திரைப்பட விழாவில் இராவண கோட்டம் விருதுகளை பெற்றுள்ளது.
‘சிறந்த திரைப்படம்’ மற்றும் ‘சிறந்த இயக்குநர்’ என்ற இரு பிரிவுகளில் ‘அவுட்ஸ்டேண்டிங் அச்சீவ்மெண்ட் அவார்ட்’ என்ற விருதைப் பெற்றுள்ளது.