ஸென் ஸ்டுடியோஸ் சார்பில் புகழ் தயாரிப்பில், “தேஜாவு” இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் & ஸ்மிருதி வெங்கட் நடிக்கும் புதிய படம், “தருணம்”
இப்படத்தின் பூஜை மிகச் சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில், இன்று காலை சென்னையில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
முதல் நீ முடிவும் நீ படம் மூலம் இளைஞர்களின் உள்ளம் கவர்ந்த கிஷன் தாஸ் இப்படத்தில் நாயகனாக நடிக்க, தமிழ் திரையுலகின் வளர்ந்து வரும், பிரபல இளம் நடிகை ஸ்மிருதி வெங்கட் நாயகியாக நடிக்கிறார்.
முதல் படமான தேஜாவு படத்தில் திரில்லர் கதையில் கலக்கிய இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இப்படத்தில் மனம் வருடும், மிக மென்மையான காதல் கதை மூலம் ரசிகர்களை மயக்க வருகிறார்.