பாகுபலி பிரபாஸ் நடிப்பில், ஓம் ராவத் இயக்கத்தில் கடந்த 16ஆம் தேதி வெளியானது ஆதிபுருஷ் . ராமாயண கதையாக உருவாகியுள்ள இப்படத்தில், பிரபாஸ் ராமராகவும், சைஃப் அலிகான் ராவணனாகவும், கீர்த்தி சனோனி சீதையாகவும் நடிக்க, மொத்தம் ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகியுள்ளது.
இப்படத்தின் கிராஃபிக்ஸ் காட்சிகளோ கார்ட்டூன் காட்சிகள் மாதிரி இருப்பதாக ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வந்தனர்.
சீதை தொடர்பான வசனம், அனுமன் ராவணன் பற்றி பேசும் வசனம் போன்றவைகளுக்கு கடும் எதிர்ப்புகளும் கிளம்பின. இந்திய திரைப்பட தொழிலாளர் சங்கத்தினர் இப்படத்தை தடை செய்ய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதமும் எழுதினர்.
நேபாளம் உள்ளிட்ட ஒரு சில நாடுகளில் இப்படத்துக்கு தடையும் விதிக்கப்பட்டது.
இந்நிலையில் சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகல் தனது ட்விட்டர் பக்கத்தில், “ராமரின் பக்தர்களும் இந்த மாநில மக்களும் ராமரின் தாய் வீட்டிற்கு வருகை தரும் அமித்ஷாவை வரவேற்கிறோம்.
அதேநேரத்தில் ராமாயணம் மற்றும் கடவுள்களை கொச்சைப்டுத்தும் ஆதிபுருஷ் படத்தை இன்றே தடை செய்ய வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்” என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்.
இச் சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.