Tuesday, May 20, 2025
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

சினிமாவில் எழுத்தாளர்களுக்கு உரிமை இல்லை! பாக்யராஜ் பரபரப்பு பேச்சு

admin by admin
June 25, 2023
in News
418 4
0
585
SHARES
3.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

வேதா பிக்சர்ஸ் எஸ் தியாகராஜா , தயாரிப்பில் செல்வக்குமார் இயக்கத்தில் வெற்றி-ஷிவானி நடிப்பில், மாறுபட்ட கதைக்களத்தில், சமூக அக்கறை மிக்க படைப்பாக, கேரள மாநில “பம்பர்” லாட்டரியை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் ‘பம்பர்’. ஜூலை 7ம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன், திரை பிரபலங்கள் கலந்துகொள்ளப் பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இவ்விழாவினில் இயக்குநர் கே பாக்யராஜ், தயாரிப்பாளர் சங்கம் சார்பில் பொருளாளர் திரு இராதாகிருஷ்ணன், இயக்குநர் முத்தையா, இயக்குநர் கோபிநாத், இயக்குநர் மந்திரமூர்த்தி, இயக்குநர் கணேஷ் கே பாபு, இயக்குநர் அனீஷ், இயக்குநர் ரஃபீக் முதலானோர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.

You might also like

இசை நாயகன் ‘பால் டப்பா’ நடிகராக அறிமுகமாகிறார்.!

‘யோகிடா’ இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா!

மாடலிங் கலைஞர் நிமிஷாவை மணந்தார் லியோ ஹம்சவிர்தன்!

இந்நிகழ்வில் நடிகர் வெற்றி பேசியதாவது…

முதன்முறையாக நான் ஒரு பாடலுக்கு நடனம் ஆட முயற்சி செய்துள்ளேன், தொடர்ந்து திரில்லர் படம் மட்டும்தான் செய்கிறேன் என்று என் மீது ஒரு விமர்சனம் இருக்கிறது, இந்த படத்தில் அது மாறும் என்று நம்புகிறேன், இயக்குநர் கதையின் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தார், அவர் நினைத்தது போலப் படம் வந்துள்ளது.இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவின் அனைத்து பாடல்களும் நன்றாக வந்துள்ளது, கண்டிப்பாக இந்த படம் உங்களுக்குப் பிடிக்கும், படத்திற்கு ஆதரவு தாருங்கள், நன்றி

இயக்குநர் செல்வகுமார் பேசியதாவது…

என்னை நம்பி எனக்கு இப்படி ஒரு வாய்ப்பை தந்த தயாரிப்பாளர் தியாகராஜா அண்ணனுக்கு நன்றி. படம் நன்றாக வந்துள்ளது, இதற்கு உதவியாக இருந்த படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. குறிப்பாக ஒளிப்பதிவாளர் மற்றும் இசையமைப்பாளர் இருவருக்கும் மிகப்பெரிய நன்றி. இது ஒரு குழு முயற்சி. இந்தப்படம் அழுத்தமான கருத்தைப் பேசும். கண்டிப்பாக இந்த படம் உங்களுக்குப் பிடிக்கும் என நம்புகிறேன், நன்றி.

இயக்குநர் K பாக்யராஜ் பேசியதாவது…

அறிமுக இயக்குநர் செல்வகுமார் இப்படத்தை இயக்கியிருக்கிறார். அவர் வேலை பார்த்த இயக்குநர்கள் இங்கு வந்துள்ளதை பார்க்கப் பெருமிதமாக இருக்கிறது. டிரெய்லர் நன்றாக உள்ளது. புரியாத பாடல்கள் தான் நிறைய வந்துகொண்டிருக்கிறன, ஆனால் இந்தப்படத்தில் பாடல்கள் கேட்க நன்றாக உள்ளது. நடிகர் வெற்றி முதல் படத்தில் தன் சொந்த பணத்தில் நடித்தார், அதிலும் நல்ல கதையாகத் தேர்ந்தெடுத்து நடித்தார். ஒவ்வொரு படத்திலும் நல்ல கதைகளைத் தேர்ந்தெடுக்கிறார். அவருக்கு என் வாழ்த்துகள். படத்தில் வேலை பார்க்கும் அனைவருக்கும் பாடல் பாடுபவர்கள் முதல் உரிமை இருக்கிறது. ஆனால் எழுத்தாளர்களுக்கு உரிமை இல்லாமல் இருக்கிறது. இதற்குக் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் எனப் போட்டுக்கொண்ட நானும் ஒரு காரணம். இது மாற வேண்டும். புதுத் தயாரிப்பாளருக்கு என் வாழ்த்துகள். படத்திற்கு ஆதரவு தாருங்கள், நன்றி.

‘ஜீவி’ புகழ் வெற்றி கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தை வேதா பிக்சர்ஸ் பேனரில் சு. தியாகராஜா தயாரித்துள்ளார். இயக்குநர்கள் மீரா கதிரவன், ‘கொம்பன்’ மற்றும் ‘விருமன்’ புகழ் முத்தையா உள்ளிட்டவர்களிடம் பணியாற்றிய அனுபவமுள்ள எம். செல்வக்குமார் இயக்கியுள்ளார்.

‘பம்பர்’ படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்க கார்த்திக் நேத்தா பாடல்களை இயற்றியுள்ளார். படத்தின் ஒளிப்பதிவை ‘நெடுநல்வாடை’, ‘எம்ஜிஆர் மகன்’, ‘ஆலம்பனா’ மற்றும் ‘கடமையைச் செய்’ ஆகிய திரைப்படங்களின் ஒளிப்பதிவாளர் வினோத் ரத்தினசாமி கையாண்டுள்ளார். படத்தொகுப்புக்கு மு.காசிவிஸ்வநாதன் பொறுப்பேற்றுள்ளார்.

admin

admin

Related Posts

இசை நாயகன் ‘பால் டப்பா’ நடிகராக அறிமுகமாகிறார்.!
News

இசை நாயகன் ‘பால் டப்பா’ நடிகராக அறிமுகமாகிறார்.!

by admin
May 20, 2025
‘யோகிடா’  இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா!
News

‘யோகிடா’ இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா!

by admin
May 20, 2025
மாடலிங் கலைஞர் நிமிஷாவை மணந்தார் லியோ ஹம்சவிர்தன்!
News

மாடலிங் கலைஞர் நிமிஷாவை மணந்தார் லியோ ஹம்சவிர்தன்!

by admin
May 20, 2025
விஜய் ஆண்டனி நடிப்பில், உருவாகும் புதிய படம் ‘லாயர்!’
News

விஜய் ஆண்டனி நடிப்பில், உருவாகும் புதிய படம் ‘லாயர்!’

by admin
May 20, 2025
‘சுகர் பேபி’ திரிஷா .. தக் லைஃப் கமலின் ஆசை நாயகியா ? வில்லங்கம் ஸ்டார்ட் !
News

‘சுகர் பேபி’ திரிஷா .. தக் லைஃப் கமலின் ஆசை நாயகியா ? வில்லங்கம் ஸ்டார்ட் !

by admin
May 20, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?