இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தோனி, அவரது மனைவி சாக்ஷி ஆகியோர் சினிமா துறையில் தயாரிப்பாளராக கால் பதித்து உள்ளனர். தங்களது முதல் படமாக ‘எல் ஜி எம்’ என்ற தமிழ் படத்தை தயாரித்து வருகின்றனர்.
இப் படத்தை ரமேஷ் தமிழ்மணி இசையமைத்து இயக்கியுள்ளார் இப்படத்தில் நடிகை நதியா, ஹரிஷ் ,கல்யாண், விஜய் ,இவானா, யோகி பாபு உள்பட பலர் படத்தில் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
இதில் கலந்து கொண்ட தோணி பேசுகையில்,சென்னை மக்கள் என்னை எப்போதோ தத்தெடுத்து விட்டனர். என்னுடைய முதல் டெஸ்ட் தொடர் சென்னையில் தான் நடந்தது.. இங்கு கிரிக்கெட்டில் பல நல்ல அம்சங்களை நான் தொடங்கினேன். என்னை தமிழக மக்கள் கொண்டாடினர் என் மீது அளவில்லா அன்பு செலுத்தி வருகின்றனர்
எனது முதல் சினிமா படமும் தமிழில் தான் அமைந்துள்ளது. தமிழில் நல்ல வார்த்தைகள் அதிகம். சினிமா எடுப்பது கடினம். அதுக்கு ஏற்றபடி படம் எடுக்க வேண்டும் என்று என் மனைவிக்கு நான் அறிவுறுத்தி இருக்கிறேன்.வருங்கால மாமியார் வருங்கால மருமகள் ஒரு பையன் ஆகியோரை சுற்றி இப்படத்தின் கதை நடக்கிறது.இவ்வாறு அவர் பேசினார்
மேலும் நடிகர் யோகிபாபு குறித்து பேசுகையில், “எங்கள் அணியில் ராயுடு ஓய்வு பெற்று விட்டார். டைம் கொடுத்தால் யோகி பாபுவை என் அணியில் சேர்க்க நான் தயார் ஆனால் பயிற்சிக்கு நான் அழைத்தால் அவர் வர வேண்டுமே ஆனால் அவர் மிகவும் பிசியாக இருக்கிறாரே” என நகைச்சுவையுடன் பேசினார்.












