வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும் மாவீரன் !-நடிகர் சிவகார்த்திகேயன்
மண்டேலா பட இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில்,நடிகர் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், மிஷ்கின் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகி, விரைவில் வெளியாகவுள்ள திரைப்படம், மாவீரன்.இப்படத்தின் புரமோஷன் நிகழ்வு சென்னையில் நடந்தது .
இந்த நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் பேசுகையில்,” “எப்போதும் படத்தின் ரிலீஸ் குறித்து பதற்றம் இருக்கும். இப்போது படத்தை உங்களுக்கு காட்ட வேண்டும் என்ற ஆர்வம் தான் மேலோங்கியுள்ளது.இயக்குநர் மடோன் அஸ்வின் படங்களில் சமூக பார்வையும், அக்கறையும் இருக்கும். அதை ஜனரஞ்சகமாக அனைவரும் விரும்பும் வகையில் கொடுப்பார்.
அவரின் சமூக அக்கறை இந்தப் படத்திலும் உண்டு. பார்வையாளர்களிடம் கருத்து சொல்லும் எந்த வசனமும் படத்தில் இல்லை. ஆனால், படம் பார்த்து முடிக்கும்போது அந்தக் கருத்து மக்களிடம் சென்று சேர்ந்திருக்கும். இயக்குனர் மிஷ்கினின் படங்கள் எப்போதும் என்னுடைய ஃபேவரைட். அவர் கறாரான ஆள் என நினைத்திருந்தேன்.
ஆனால், அவர் மிகவும் ஸ்வீட். இப் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தை ரசிக்கும்படியாக செய்திருக்கிறார். படம் உங்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும்.இயக்குநர் மடோன் அஸ்வின் படங்களில் சமூக பார்வையும், அக்கறையும் இருக்கும். அதை ஜனரஞ்சகமாக அனைவரும் விரும்பும் வகையில் கொடுப்பார். அவரின் சமூக அக்கறை இந்தப் படத்திலும் உண்டு. பார்வையாளர்களிடம் கருத்து சொல்லும் எந்த வசனமும் படத்தில் இல்லை. இப்படத்துக்கு ரஜினியின் டைட்டிலை வைத்திருப்பது பெருமையாக உள்ளது.
அதுக்கு நியாயம் சேர்த்திருக்க போகிறோமா என்கிற பொறுப்புணர்ச்சி அதிகமாக இருந்தது. போன படம் சறுக்கிவிட்டது. பொதுவாக தோல்விகளுக்கு மட்டும் நான் பொறுப்பேற்று கொள்வேன். வெற்றி என்பது மொத்த குழுவின் உழைப்பால் கிடைப்பது”இவ்வாறு அவர் பேசினார்.