நிகழ்வில் ‘ஆஹா’ வைஸ் பிரசிடெண்ட்டும் கண்டெண்ட் ஸ்ட்ரேட்டர்ஜிஸ்ட்டுமான கவிதா பேசியதாவது, “ஆஹா, தமிழில் ஆரம்பித்ததில் இருந்து ஆதரவு கொடுத்து வரும் பத்திரிக்கை நண்பர்களுக்கு நன்றி. மலையாளத்தில் உணர்வுப்பூர்வமான கதைகள் வரும்போது அதனை கொண்டாடுகிறோம். ஆனால், தமிழ் சினிமா என்று வந்து விட்டால் கமர்ஷியல் படங்கள்தான் என்ற ரீதியில் அணுகுகிறோம். அப்படி இல்லாமல் தமிழிலும் புத்திசாலித்தனமான கதைகள் கொண்டாடப்பட வேண்டும் என்பதை ஆஹா நோக்கமாகக் கொண்டுள்ளது. அந்த வகையில்தான் ‘சிங்க்’ படமும் வந்துள்ளது. புதுமுயற்சியை ஊக்குவிக்கும் இடத்தில் ஆஹா தமிழை அனைவரும் வைத்திருப்பது எங்களுக்கு பெருமையான விஷயம். வழக்கமான ஹாரர் ஜானர் படங்களின் கதையில் இருந்து ‘சிங்க்’ வேறுபட்டு இருக்கும். இசை, காட்சிகள் என அனைத்துமே சிறப்பாக உள்ளது. நீங்கள் பார்த்துவிட்டு உங்கள் ஆதரவைத் தாருங்கள்”.
நடிகர் நவீன் ஜார்ஜ் பேசியதாவது, “நண்பர்கள் மூலமாகதான் இந்தக் கதைக்குள் வந்தேன். படத்தின் திரைக்கதை படித்தபோது உண்மையாகவே ஆர்வமூட்டுவதாக இருந்தது. வழக்கமான ஹாரர் படங்களைப் போல இது இருக்காது. டீமாகவே எங்களுக்குள் சிங்க் நன்றாக இருந்தது. ஹாரர் படம் போல அல்லாமல் காமெடி படம் எடுப்பது போல ஜாலியாக வேலை பார்த்தோம். அழகான அனுபவமாக மாற்றித் தந்த படக்குழுவுக்கும், ஆஹாவுக்கும் நன்றி” என்றார்.
நடிகை மோனிகா, “’சிங்க்’ படத்தில் என்னைத் தேர்ந்தெடுத்ததற்காக படக்குழுவுக்கு நன்றி! ஆஹாவும் எங்களுக்கு ஆதரவு கொடுத்தார்கள். ‘சிங்க்’ மிகவும் ஆர்வமூட்டும் திரைக்கதையாக இருக்கும். படம் பார்த்து விட்டு உங்கள் ஆதரவை கொடுங்கள்”.
இயக்குநர் விகாஸ் ஆனந்த், “நண்பர்கள் சேர்ந்து எடுத்த படம் இது என்பதால் பட்ஜெட்டில் நிறைய விஷயங்கள் காம்ப்ரமைஸ் செய்தோம். நாங்கள் திட்டமிட்ட நேரம் தாண்டி படப்பிடிப்பு போனால் கூட நாங்கள் எங்களுக்குள் பேசி குறைந்த நாட்களிலேயே படத்தை முடித்து விட்டோம்.”.
நடிகர் கிஷன் பேசியதாவது, “ ’சிங்க்’ படத்திற்காக இயக்குநர் விகாஸ் கடுமையாக உழைத்துள்ளார். இந்த படமும் பட்ஜெட்டும் சின்னதாக இருக்கலாம். ஆனால், நிறைய கனவுகளோடு இந்தப் படத்தை எடுத்து முடித்திருக்கிறோம். அந்த வகையில் இது பெரிய படம்தான். படக்குழுவில் உள்ள அனைவருடனும் வேலை பார்த்தது மகிழ்ச்சியான விஷயம். நாங்கள் படம் எடுத்து முடித்ததும், ’ஓடிடியில் தான் ரிலீஸ் செய்ய உள்ளோம்,” என்றார்.