‘ப்ராஜெக்ட் கே’ பிரபாஸின் மிரட்டல் தோற்றம் (ஃபர்ஸ்ட் லுக்) வெளியானது!
நடிகர் பிரபாஸ் கதையின் நாயகனாக நடிக்கும் பெரிதும் எதிர்பார்ப்புக்குள்ளான அறிவியல் புனைவு கதை திரைப்படமான ‘ப்ராஜெக்ட் கே’ எனும் திரைப்படத்தினை பற்றிய புதிய தகவலை வெளியிட்டு வைஜெயந்தி மூவிஸ், மீண்டும் ஒருமுறை பார்வையாளர்களின். கற்பனை திறனை விரிவடைய செய்திருக்கிறது. கமல்ஹாசன் உள்ளிட்ட நட்சத்திர நடிகர்களுடன் இணைந்து சான் டியாகோவின் காமிக்- கானில் பங்கேற்கும் முதல் இந்திய திரைப்படமாக மாற்றம் அடைந்த பிறகு, ஒரு நாள் முன்னதாக தீபிகா படுகோனின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடப்பட்டதால், ரசிகர்களின் உற்சாகம் அதிகரித்தது.
இந்நிலையில், தற்போது பிரபாஸின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது. செஃபியா டோன் காட்சி பின்னணியில் வசீகரிக்கும் தோற்றத்தில் கதையின் நாயகனான பிரபாஸ் காணப்படுகிறார்.
‘ப்ராஜெக்ட் கே’ படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதன் அறிமுகத்தை சான் டியாகோ காமிக்-கானில் மதிப்புமிக்க ஹெச் ஹாலில் வெளியிடப்படவுள்ளது. இந்த பிரத்யேக நிகழ்வின் போது படத்தின் தலைப்பு மற்றும் டீசரை படைப்பாளிகள் வெளியிடுவதால் மறக்க முடியாத பயணத்திற்காகவும், அனுபவத்திற்காகவும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் தயாராகும் ‘ப்ராஜெக்ட் கே’ திரைப்படத்தில் அமிதாபச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன், திஷா படானி உள்ளிட்ட இந்திய அளவில் பிரபலமான நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். இந்த நட்சத்திர நடிகர்களின் ஒருங்கிணைப்பு மற்றும் இயக்குநர் நாக் அஸ்வினின் திறமை ஆகியவை உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் இணையற்ற சினிமா அனுபவத்தை உண்டாக்கும் என்பது உறுதியாகிறது.