பாலிவுட்டில் பிரபலமான நடிகையாக வலம் வரும் மல்லிகா ஷெராவத். தனக்கென தனியே ரசிகர் பட்டாளத்தையும் கொண்டுள்ளார், தமிழிலும் சில படங்களில் நடித்துள்ள மல்லிகா ஷெராவத்,
இந்நிலையில் மல்லிகா ஷெராவத் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு திரையுலகில் நடந்த பல விஷயங்கள் குறித்து மனம் திறந்துள்ளார்.”என்னுடன் நடிக்க பல முன்னணி நடிகர்கள் ஒத்துக்கொள்ளவில்லை. ஏனெனில் அவர்கள் கேட்ட சில விஷயங்களுக்கு நான் சமரசம் செய்துகொள்ளவில்லை.
நம்மால் கட்டுப்படுத்த முடியும் என்ற கதாநாயகியைத்தான் ஹீரோக்கள் விரும்புகிறார்கள். எந்த நடிகை அட்ஜெஸ்ட்மெண்ட் செய்கிறாரோ அவருக்குத்தான் வாய்ப்பு கொடுக்கிறார்கள்.நான் அட்ஜெஸ்ட்மெண்ட்டை ஒத்துக்கொள்வதில்லை.
வேறு ஒருவரி பாலியல் ஆசைக்கு நான் ஆளாக விரும்பவில்லை. ஒரு ஹீரோ உங்களை நள்ளிரவு அவரது வீட்டுக்கு வர சொன்னால் நீங்கள் செல்ல வேண்டும். அப்போதுதான் நீங்கள் அந்த ஹீரோவின் நட்பு வட்டத்தில் இருக்க முடியும். அவர் அழைக்கும்போது நீங்கள் செல்லவில்லை என்றால் அந்தப் படத்திலிருந்து தூக்கி எறியப்படுவீர்கள்.அட்ஜெட் செய்யும் நடிகைகளை தான் அவர்களுக்கு பிடிக்கும்.
ஆனால் எனக்கு அது பிடிக்காது. சிறந்த கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்க முயற்சி செய்தேன். ஆனால் நானும் சில தவறுகளை செய்திருக்கிறேன். சில கதாபாத்திரங்கள் நல்லபடியாக அமைந்தன;
சில கதாபாத்திரங்கள் அமையவில்லை. இருந்தாலும் எனது திரைப்பயணம் சிறப்பானதாகவே இருந்தது” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.