ஹாலிவுட் தரத்திலான தமிழ்ப்படம்! ‘கொலை’ – விமர்சனம்!
விஜய் ஆண்டனி வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருக்கும் படம், ‘கொலை’! அவருடன் ரித்திகா சிங், மீனாட்சி சௌத்ரி, ராதிகா சரத்குமார், முரளி ஷர்மா, சித்தார்த்தா ஷங்கர், ஜான் விஜய், அர்ஜூன் சிதம்பரம், சம்கித் போரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
Infiniti Film Ventures & Lotus Pictures தயாரித்துள்ள இப்படத்தினை, பாலாஜி கே குமார் இயக்கியிருக்கிறார்.
விஜய் ஆண்டனி நடிப்பினில், இதற்கு முன்னர் வெளியான ‘பிச்சைக்காரன் 2’ திரைப்படம் விமர்சன ரீதியாக அதிருப்தியை பெற்ற நிலையில், தற்போது வந்திருக்கும் ‘கொலை’, எப்படி இருக்கிறது. பார்க்கலாம்.
மாடலிங்கில் ஆரம்பகட்ட நிலையிலிருந்து, படிப்படியாக முன்னேறிய பிரபல மாடல், மீனாட்சி சௌத்ரி. அவரை, உலக அளவில் மாடலிங்கில் கொடி கட்டி பறக்கும், ராதிகா சரத்குமார் நடத்திவரும், மாடலிங் கம்பெனியில் ஒப்பந்தம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதனிடையே, ராதிகா சரத்குமாரிடம் மாடல் கோ ஆர்டினேட்டராக வேலை செய்யும் முரளி ஷர்மா, ராதிகா சௌத்ரியை தனது படுக்கைக்கு அழைக்கிறார். தனது விருப்பப்படி நடந்தால் மட்டுமே ஒப்பந்தம் செய்வேன். என நிர்பந்திக்க, ராதிகா சௌத்ரி அதை மறுத்து விடுகிறார்.
அதன்பிறகு, ராதிகா சௌத்ரி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார். இந்தக் கொலை,மற்றும் கொலைக்கான காரணத்தை கண்டுபிடிக்க, ரித்திகா சிங், விஜய் ஆண்டனி இருவரும் நியமிக்க படுகிறார்கள். இவர்கள் கொலையாளியை கண்டுபிடித்தார்களா, இல்லையா? என்பதே கொலை, படத்தின் கதை, திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்.
மர்மமான முறையில் நடந்த ஒரு கொலையை, 3 Act Structure formula வை தாண்டிய, Inception Flashback முறையில் தெளிவான, குழப்பமில்லாத திரைக்கதையில் சொல்லியிருப்பதில் இயக்குநர் பாலாஜி கே குமார், வெற்றி பெற்றிருக்கிறார். படம் முழுவதும் ஒரே கலர் டோன், ரெட்ரோ ஸ்டைல் மியூசிக் உள்ளிட்ட டெக்னிக்கல் விஷயங்களில் இப்படம் பாராட்டு பெறும் படமாகவே இருக்கிறது. எனினும், சில தவறுகளை உள்ளடக்கிய, திரைப்பட பயிற்சி கல்லூரி மாணவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படமாக இது இருக்கிறது.
படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை, மர்மமான முறையில் போரடிக்காமல் செல்வது, ரசிகர்களுக்கு ஒரு புது அனுபவத்தை கொடுக்கும். கதாபாத்திரங்களுக்கு ஏற்றபடி, நடிகர்களின் பங்களிப்பு மிகவும் சிறப்பாக இருக்கிறது.
விஜய் ஆண்டனியின் தோற்றத்திற்கும், முக பாவனைக்கும், இணக்கமில்லாத மனைவியுடன் வாழும் கதாபாத்திரத்திற்கு, அவர் நன்கு பொருந்துகிறார். வழக்கமான ஹீரோயிசமற்ற இந்தப்படத்தினை, தேர்வு செய்து நடித்த விஜய் ஆண்டனியை பாராட்டியே ஆக வேண்டும். வித்தியாசமான தோற்றத்தில் அவரது ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்கிறார்.
மாடலிங் உலகில் ராணிகளை உருவாக்கும் நிறுவனத்தின் பெண் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை வாவ், சொல்ல வைக்கிறார் ராதிகா சரத்குமார். பண்பட்ட நடிப்பினை வெளிப்படுத்தி காட்சிகளை மேம்படுத்துகிறார்.
மாடலாக நடித்துள்ள ராதிகா சௌத்ரி அழகாகவும், திறமையாகவும் நடித்திருக்கிறார். அவருக்கு நிகர் அவரே. சூப்பர் மாடல்!
சில காட்சிகள் என்றாலும் அட்டகாசம் செய்துவிட்டு போகிறார், முரளி ஷர்மா. ராதிகா சௌத்ரியை அடையப்போகும் நினைப்பில், ‘Kya Khoob Lagti Ho, Badi Sundar Dikhti Ho’ பாடலை பாடிய படி, அவர் செய்யும் லூட்டி அட்டகாசம். அதே சமயத்தில் ராதிகா சரத்குமாரிடம் வாங்கி கட்டிக்கொள்ளும் இடமும் சூப்பர் நடிகராக நிரூபித்துள்ளார்.
இப்படி, படத்தில் நடித்த ரித்திகா சிங், சித்தார்த்தா ஷங்கர், ஜான் விஜய், அர்ஜூன் சிதம்பரம், சம்கித் போரா என, ஒவ்வொரு நடிகரும், கதாபாத்திரங்களாகவே பிரதிபலித்துள்ளது படத்திற்கான வெற்றி.
மியுசிக், கேமரா, எடிட்டிங் மூன்றுமே படத்தின் பிரதான வெற்றிக்கு துணை நிற்கிறது.
சில தவறுகள் ஆங்காங்கே இருந்தாலும், கொலை திரைப்படம் பார்வையாளர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தினைத் தரும்!