Monday, July 13, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home Politics

விளை நிலங்களை அழித்து சுரங்கம் அமைப்பதா?என் எல் சி நிர்வாகத்துக்கு கமல் கடும் கண்டனம்!

admin by admin
July 29, 2023
in Politics
419 4
0
585
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

விளை நிலங்களை அழித்து சுரங்கம் அமைப்பதா?விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று நிலக்கரி சுரங்கப் பணிகளை உடனடியாக கை விட வேண்டுமென மக்கள் நீதி மய்யக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,”நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் 2-வது சுரங்க விரிவாக்கப் பணிக்காக கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகேயுள்ள கிராமங்களில் விளை நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. வேளாண் நிலங்களில் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் போராடி வருகின்றனர்.

You might also like

கபாடி வீராங்கனைக்கு பயிற்சியாளர் பாலியல் வன்கொடுமை.! அரசுக்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம் !!

தனிக்கட்சி தொடங்கும் அண்ணாமலை! பரபரப்பாகும் அரசியல் களம் !!. …

போதைக்கு எதிரான யுத்தம் ! மக்கள் நீதி மய்யக்கட்சி அதிரடி தீர்மானம்!!

இந்நிலையில், விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி, சுரங்க விரிவாக்கத்துக்காக வளையமாதேவி பகுதியில் வாய்க்கால் வெட்டும் பணி தொடங்கியுள்ளது. இதனால், அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மக்கள் போராடுவார்கள் என்று தெரிந்ததால், போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இதையும் மீறி போராட்டங்கள் வெடித்து, பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் தாக்கப்பட்டுள்ளன.
பயிர்கள் விளைந்து நிற்கும் வயல்களில், ராட்சத இயந்திரங்கள் மூலம் பணிகளை மேற்கொள்வது வேதனைக்குரியது. விளைநிலங்களுக்குக் கீழே தங்கமே கிடைத்தாலும், வேளாண்மை செய்வதே அறிவுடைமை. ஏற்கனவே பல்வேறு நெருக்கடிகளால் விவசாயிகள் உழவுத்தொழிலில் இருந்து வெளித்தள்ளப்பட்டு, விளைநிலங்கள் சுருங்கி வரும் சூழலில் வளர்ச்சி எனும் பெயரால் விவசாயம் அழிக்கப்படுவது மானுடத்திற்கே எதிரான அநீதி.

நிலக்கரிச் சுரங்கத்துக்காக பல நூறு ஏக்கரில் விளை நிலங்களைக் கையகப்படுத்த முற்படுவதும், அதற்கு எதிராக மக்கள் போராடுவதும் தொடர் கதையாகி வருகிறது. பொதுத்துறை நிறுவனமாகவே இருந்தாலும், மக்களின் எதிர்ப்பைக் கருத்தில் கொண்டு, சுரங்க விரிவாக்கத் திட்டத்தைக் கைவிடுவதே சாலச் சிறந்தது.

வேளாண் பெருமக்களின் எதிர்ப்பையும் மீறி, விளை நிலங்களைக் கையகப்படுத்தும் முயற்சிக்குத் தமிழ்நாடு அரசு ஒருபோதும் துணைபோகக் கூடாது. எதன்பொருட்டும் விவசாயிகளின் விளைநிலங்களைப் பறிப்பது ஏற்கத்தக்கதல்ல. விவசாயப் பெருங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை அழித்தால்தான் வளர்ச்சி கிடைக்கும் என்றால், அப்படிப்பட்ட வளர்ச்சி தேவையே இல்லை.

வயிற்றுக்குச் சோறிடுவோரை வேதனைக்குள்ளாக்க வேண்டாம். விவசாயிகள், பொதுமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, விளை நிலங்களைக் கையகப்படுத்தும் பணியை உடனே நிறுத்த வேண்டும். ஏற்கெனவே நிலம் கொடுத்தவர்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.இவ்வாறு அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

admin

admin

Related Posts

கபாடி வீராங்கனைக்கு  பயிற்சியாளர் பாலியல் வன்கொடுமை.! அரசுக்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம் !!
Politics

கபாடி வீராங்கனைக்கு பயிற்சியாளர் பாலியல் வன்கொடுமை.! அரசுக்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம் !!

by admin
June 28, 2026
தனிக்கட்சி தொடங்கும் அண்ணாமலை!  பரபரப்பாகும் அரசியல் களம் !!. …
Politics

தனிக்கட்சி தொடங்கும் அண்ணாமலை! பரபரப்பாகும் அரசியல் களம் !!. …

by admin
June 1, 2026
போதைக்கு எதிரான யுத்தம் ! மக்கள் நீதி மய்யக்கட்சி அதிரடி தீர்மானம்!!
Politics

போதைக்கு எதிரான யுத்தம் ! மக்கள் நீதி மய்யக்கட்சி அதிரடி தீர்மானம்!!

by admin
January 24, 2026
திமுக கூட்டணிக்கு , கண்டிப்பாக  பிரசாரம் செய்வேன்! -கமல்ஹாசன் எம்பி,
Politics

திமுக கூட்டணிக்கு , கண்டிப்பாக  பிரசாரம் செய்வேன்! -கமல்ஹாசன் எம்பி,

by admin
December 18, 2025
மாநிலங்களவை  எம்பியானார்  கமல்ஹாசன் !
Politics

மாநிலங்களவை எம்பியானார் கமல்ஹாசன் !

by admin
July 25, 2025

Recent News

வித்தியாசமான அனுபவத்தை கொடுத்த ‘என்ன விலை’! -நிமிஷா சஜயன்.

வித்தியாசமான அனுபவத்தை கொடுத்த ‘என்ன விலை’! -நிமிஷா சஜயன்.

July 12, 2026
தென்னிந்தியாவின் ‘இசைக்குயில்’ எஸ், ஜானகி காலமானார்!

தென்னிந்தியாவின் ‘இசைக்குயில்’ எஸ், ஜானகி காலமானார்!

July 12, 2026
துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே நடிக்கும் ‘ஸ்ரீ ஸ்ரீ’ ! ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்வெளியானது!!

துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே நடிக்கும் ‘ஸ்ரீ ஸ்ரீ’ ! ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்வெளியானது!!

July 11, 2026
ஒளிப்பதிவாளர் செழியன் காலமானார்!

ஒளிப்பதிவாளர் செழியன் காலமானார்!

July 10, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?