பிக்பாஸ் நிகச்சியின் மூலம் தமிழக ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சின்னத்திரை நடிகர் கவின்.சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான “லிஃப்ட்” மற்றும் “டாடா” திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது நடன இயக்குநர் சதீஷ் இயக்கத்தில், இசையமைப்பாளர் ராக் ஸ்டார் அனிருத் இசையில், ஒரு ரொமான்ஸ் படத்தில் நடித்துவருகிறார் கவின். இப்படத்திற்கான எதிர்பார்ப்பு இப்போதே பெருமளவில் உயர்ந்துள்ளது. இந்நிலையில் நடிகர் கவின் தனது திருமண அறிவிப்பை வெளியிட்டுள்ளார்
நடிகர் கவின் தனியார்ப் பள்ளியில் பணியாற்றி வரும் மோனிகா என்பவரை காதலித்து வந்தார். மிக ரகசியமான இவர்களின் காதல் தற்போது இருவீட்டார் சம்மதத்துடன் திருமணக் கட்டத்தை எட்டியுள்ளது. இவர்களின் திருமணம் அனைவரின் ஆசியுடன் ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி கோலாகலமாக நடைபெறவுள்ளது.