இந்தியாவின் முதல் தபால் மனிதன் கதை “ஹர்காரா” ! வரும் ஆகஸ்ட் 25 ல் வெளியாகிறது!!

‘வி 1 மர்டர் கேஸ்’ படம் மூலம் நாயகனாக அறிமுகமான ராம் அருண் காஸ்ட்ரோ  நடித்து இயக்கியிருக்கும் புதிய படம் “ஹர்காரா”, இந்தியாவின் முதல் தபால் மனிதனின் கதை சொல்லும் வித்தியாசமான படமாக உருவாகியுள்ளது. இப்படத்தில் மற்றொரு நாயகனாக காளி வெங்கட் நடிக்க, நாயகியாக கவுதமி நடித்துள்ளார். இவர்களுடன் பிச்சைக்காரன் ராமமூர்த்தி,ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தற்காலத்தில் டிஜிட்டல் வசதிகள் எதுவுமே இல்லாத ஒரு மலைக்கிராமத்திற்குச் செல்லும் போஸ்ட்மேன் அங்குப் படும் அவஸ்தையும்,  அங்கு வாழும் மக்களின் வாழ்க்கையும், பின்னணியாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் இந்தியாவின் முதல் போஸ்ட்மேன் பற்றிய ஆச்சரிய எபிஸோடும் படத்தில் உள்ளது.    

இப்படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க தேனி அருகில் மலைக் கிராமங்களில் நடத்தப்பட்டுள்ளது.மனதை மயக்கும் அழகான டிரமாவாக உருவாகியுள்ள “ஹர்காரா” படம், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வெளியீட்டில் ஆகஸ்ட் 25 முதல் திரையரங்குகளில் வெளியாகிறது.