‘குட் நைட்’ தயாரிப்பாளர்களின் அடுத்த பட அறிவிப்பு!
‘குட் நைட்’ படத்தை தொடர்ந்து மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி எண்டர்டெயின்மெண்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டுள்ளன
பிரபுராம் வியாஸ் எழுதி இயக்கும் இப்புதிய படத்தில் ‘குட்நைட் மணிகண்டனே கதாநாயகனாக நடிக்கிறார். ‘மாடர்ன் லவ்’ ஸ்ரீகெளரி பிரியா கதாநாயகியாக நடிக்கிறார். கண்ணா ரவி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இப்படத்தின் ஒளிப்பதிவை ஸ்ரேயாஸ் கிருஷ்ணா,கவனிக்க,ஷான் ரோல்டன் இசையமைத்து வருகிறார்.தற்காலக் காதல் அதில் நடக்கும் நிகழ்வுகள் ஆகியன குறித்த விவாதத்தை சுவாரஸ்யமான திரைக்கதை மூலம் சொல்லக்கூடிய படமாக இது இருக்கும் என்கிறார் இப்படத்தின் இயக்குநர் பிரபுராம் வியாஸ்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது . முதல் நாள் படப்பிடிப்பை நடிகர் விஜய் சேதுபதி கிளாப் அடித்து தொடங்கி வைத்தார் தொடர்ந்து கோவா அருகே உள்ள கோகர்ணா ஆகிய பகுதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.