தனுஷ்-சேகர் கம்முலா கூட்டணியில் ராஷ்மிகா மந்தனா!

தேசிய விருது நடிகர் தனுஷ், தெலுங்கு திரையுலகின் பிரபல இயக்குனர் தேசிய விருது பெற்ற சேகர் கம்முலாவுடன் தனது 51 வது படத்திற்காக  இணைந்துள்ளார்.சமீபத்தில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ்,  எல்எல்பி  அமிகோ கிரியேஷன்ஸ் பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.இதில் தனுசுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.இது தனுஷ், சேகர் கம்முலா, ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் LLP ஆகியோருடன் ராஷ்மிகா மந்தனா இணைந்து பணியாற்றும் முதல் படம் ஆகும்.

இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.இப்படத்தில் இதுவரை நடிக்காத தனித்தன்மையான ஒரு கதாபாத்திரத்தில் நடிகர் தனுசுக்காக வடிவமைத்துள்ளாராம் இயக்குனர் சேகர் கம்முலா.

இப்படத்தில் நடிக்கவுள்ள பிரபல நடிகர் நடிகைகளுடன்  தயாரிப்பு தரப்பு தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம் . இதையடுத்து மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விபரம் விரைவில் அறிவிக்கப்படும் என்கிறார்கள்.