யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்தது ஏன்? ரஜினி பரபரப்பு பேட்டி!
உத்தரப்பிரதேசத்தில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் தற்போது சென்னை திரும்பியுள்ளார். விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த் அவர் கூறியதாவது,, “ஜெயிலர் திரைப்படத்தை வெற்றிப் படமாக்கிய தமிழ்நாடு மக்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
வெற்றிப் படத்தை எனக்கு வழங்கிய இயக்குநர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்டோருக்கு என்னுடைய நன்றி.” என்றார்.
அப்போது அவரிடம் செய்தியாளர்கள் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்தது ஏன்? என நடிகர் ரஜினிகாந்திடம் சரமாரியாக கேள்வி எழுப்பினார்கள்.
இதற்கு பதிலளித்த அவர், “வயது குறைவானவர்களாக இருந்தாலும், யோகிகள், சன்னியாசிகள் காலில் விழுவது என்னுடைய பழக்கம்.உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோரை நட்பு அடிப்படையில் மட்டுமே நான் சந்தித்து பேசினேன்.” என்று கூறினார்.
அதை தொடர்ந்து 2024 நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக செய்தியாளர்கள் ரஜினிகாந்திடம் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு, “அரசியல் வேண்டாம்.” என்று அவர் தெரிவித்தார்.