லியோ படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடிக்க உள்ளார். இப் படத்தில் விஜய் அப்பா, மகன் என இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளதாகவும்,அதில் ஒரு விஜய் ரா சீக்ரெட் ஏஜெண்டாக நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தில் அப்பா விஜய்க்கு ஜோதிகா ஜோடியாக நடிக்கவுள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில்,தற்போது அவருக்கு பதிலாக சிம்ரன் அல்லது சினேகாதான் அப்பா விஜய்க்கு ஜோடியாகவுள்ளதாகவும் மகன் கேரக்டருக்கு பிரியங்கா மோகன் கமிட் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. . இந்நிலையில் இந்தப் படத்தில் நடிகர்கள் பிரஷாந்த் மற்றும் பிரபுதேவா இருவரும் கமிட்டாகியுள்ளது ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுள்ளது.
விஜய் நடிக்கவுள்ள இரட்டை வேடங்களுக்காக லுக் டெஸ்ட் எடுப்பதற்காக சமீபத்தில் வெங்கட் பிரபு, விஜய் உள்ளிட்டவர்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் சென்\றனர். அங்கு அவருக்கு . நான்கு, ஐந்து கெட்அப்களில் மேக்அப் ெடஸ்ட் நடத்தப்பட்டதாகவும் தெரிகிறது. இந்நிலையில் தற்போது லுக் டெஸ்டை முடித்துக் கொண்டு தளபதி 68 டீம் சென்னை திரும்பியுள்ளது. இயக்குநர் வெங்கட் பிரபு சென்னை விமானநிலையத்தில் திடீர் சந்திப்பாக நடிகர் சூர்யாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. நடிகர் விஜய் இந்தியா திரும்ப இன்னும் சில நாட்கள் ஆகும் என்கிறார்கள்.