பிறந்த நாள் கொண்டாடிய ஹெச்.வினோத்! வாழ்த்து சொன்ன உலகநாயகன்!!
இந்தியன் 2 ,புராஜெக்ட் கே படங்களைத் தொடர்ந்து உலகநாயகன் கமல், ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
இந்நிலையில் இன்று இயக்குனர் ஹெச்.வினோத் தனது 42வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் அவருக்கு திரைத்துறை பிரபலங்கள், ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
இதனிடையே நடிகர் கமல்ஹாசனும் ட்விட்டர் மூலம் ஹெச் வினோத்திற்கு வாழ்த்துக்களை இருவரும் இணைந்துள்ள புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார். ‘சமூக இருள் நீங்க, திரை ஒளி பாய்ச்சும் தம்பி ஹெச் வினோத் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ என்று அவர் கூறியுள்ளார்.