உலகநாயகன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 7 வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. டிஸ்னி ப்ளஸ்ஸில் 24 மணி நேரம் ஒளிபரப்பாகவுள்ள பிக் பாஸ் சீசன் 7 இரண்டு வீடுகள், 18 போட்டியாளர்களுடன் நடைபெறவுள்ளது எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.
இதனிடையே பிக் பாஸ் சீசன் 7 ப்ரோமோக்களை விஜய் டிவி தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அதேநேரம் இந்த சீசனில் பங்கேற்கவுள்ள போட்டியாளர்கள் குறித்தும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. கடந்த சீசனை விடவும் இந்தமுறை வெயிட்டான போட்டியாளர்களை களமிறக்க விஜய் டிவி முடிவு செய்துள்ளது.
அதன்படி, நடிகர்கள் அப்பாஸ், பப்லு, நடிகைகள் கெளசல்யா, கிரண், தர்ஷா குப்தா, விஜய் டிவி பிரபலங்கள் ரக்ஷன், குரேஷி, ஜாக்குலின், இவர்களுடன் ரேகா நாயர், ரக்ஷிதாவின் கணவர் தினேஷ் ஆகியோர் கலந்துகொள்ளவிருப்பதாக தெரிகிறது.
இவர்கள் தவிர இப்படடியலில் டப்பிங் ஆர்ட்டிஸ்ட், நடிகை என கலக்கி வரும் ரவீனா ரவி,அல்லது மெளன ராகம் சீரியலில் நடித்து பிரபலமான ரவீனா தாஹா இவர்களில் ஒருவர் பிக் பாஸ் சீசன் 7ல் பங்கேற்கவுள்ளது உறுதியாகியுள்ளது.