டொராண்டொ சர்வதேச திரைப்பட விழாவில்,சுசி கணேசனின்“ தில் ஹெ கிரே” !

டொராண்டொ சர்வதேச திரைப்பட விழாவில், இந்திய அரசின் தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் சார்பாக சுசி கணேசனின்“ தில் ஹெ கிரே” தேர்வு செய்யப்பட்டிருக்கிறது . செப்டம்பர் 12-ம் தேதி world Premier ஆக திரைப்பட விழாவில் ரிலீஸ் ஆகிறது. உத்திரப்பிரதேச காவல்துறையை மையமாக வைத்து உருவாகியிருக்கும் இப்படத்தில் வினித்குமார் சிங், அக்‌ஷய் ஓபராய், ஊர்வசி ரவ்ட்டேலா நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை எம்.ரமேஷ் ரெட்டி தயாரித்திருக்கிறார்.

உலகளாவிய பிரீமியருக்கு முன், முற்றிலும் புதுமையான “ஆடியோ டீஸர் “ நேற்று மாலை இந்திய பெவிலியன் (TIFF )-இல் இந்திய அரசு இணைச் செயலாளர் மற்றும் எம்.டி  
NFDC பிரிதுல் குமாரால் வெளியிடப்பட்டது.
இந் நிகழ்ச்சியில் படத்தின் இயக்குனர் சுசி கணேசன் ஹீரோயின்  ஊர்வசி ரவுடேலா மற்றும் இணை தயாரிப்பாளர் மஞ்சரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆடியோ டீஸர் வெளியீட்டு விழா குறித்து சுசி கணேசனிடம் கேட்டபோது, ​​”இது ஒரு வரலாற்றுத் தருணம். ‘தில் ஹை கிரே’ ஆடியோ டீசரை அறிமுகப்படுத்த Tiff சரியான மேடையாக அமைந்தது. இது சினிமா ஆர்வலர்களுக்கு ஒரு தனித்துவமான அனுபவத்தை கொடுக்கும் .  புதுப்புது ஐடியாக்கள் தான் சினிமாவை உயிர்ப்புடன் வைத்திருக்கும் . ஷூட்டிங்-ல் 
. “பதிவு செய்யப்பட்ட குரல்களுடன்”  ஒரு காட்சியை படமாக்கும்போது, ​​முழு செட்டும் பின் டிராப் அமைதியில் இருந்ததைக் கவனித்தேன் .. ஒவ்வொருவரும் குரலுக்கெற்றபடி கற்பனை செய்து கொண்டார்கள் . 
ஆடியோ டீஸர் யோசனை அப்போது  தோன்றியது”” என்றார்