அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள், எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடந்தது. இக்கூட்டத்தில் நடந்த விரிவான விவாதத்திற்குப் பிறகு பாஜகவுடன் கூட்டணி இல்லை என ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது. பாஜக, தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையில் இருந்தும் விலகுவதாக அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் புதிய கூட்டணி அமைக்கப்படும் எனவும் அதிமுக தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக மூத்த தலைவர் கே.பி.முனுசாமி, “அண்ணாமலையின் பேச்சு தொண்டர்களிடையே கொந்தளிப்பை உருவாக்கிவிட்டது. இன்று முதல் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகுகிறது. இபிஎஸ் தலைமையில் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி உருவாக்கப்படும். ஓராண்டாக திட்டமிட்டு உள்நோக்கத்தோடு அண்ணா, ஜெயலலிதா பற்றி பாஜக விமர்சித்து வருகிறது. அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் பற்றியும் அவதூறாக பாஜக மாநில தலைமை விமர்சித்து வருகிறது. அதிமுக பொன்விழா மாநாட்டை சிறுமைப்படுத்தியும் பாஜக மாநில தலைமை பேசியுள்ளது. 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களின் எண்ணத்திற்கு விருப்பத்திற்கு உணர்வுகளுக்கு மதிப்பளித்து கூட்டணியை முறிக்கிறோம்.” என்றார்.
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தின் முடிவில் அதிமுக மூத்த தலைவர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், “அண்ணாமலையின் பேச்சு தொண்டர்களிடையே கொந்தளிப்பை உருவாக்கிவிட்டது. இன்று முதல் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகுகிறது. இபிஎஸ் தலைமையில் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி உருவாக்கப்படும். ஓராண்டாக திட்டமிட்டு உள்நோக்கத்தோடு அண்ணா, ஜெயலலிதா பற்றி பாஜக விமர்சித்து வருகிறது. அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் பற்றியும் அவதூறாக பாஜக மாநில தலைமை விமர்சித்து வருகிறது. அதிமுக பொன்விழா மாநாட்டை சிறுமைப்படுத்தியும் பாஜக மாநில தலைமை பேசியுள்ளது. 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களின் எண்ணத்திற்கு விருப்பத்திற்கு உணர்வுகளுக்கு மதிப்பளித்து கூட்டணியை முறிக்கிறோம்.” இவ்வாறு அவர் கூறினார்