லோகேஷ் கனகராஜ் படத்திலிருந்து நயன்தாரா நீக்கம்!
விஜய் நடிப்பில்,லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ’லியோ’ திரைப்படம் வரும் 19ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில்,இப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில், ரத்னகுமார் இயக்கத்தில் உருவாக உள்ளது.
இதில் ராகவா லாரன்ஸ் நாயகனாகவும் நயன்தாரா நாயகியாகவும் நடிக்க இருப்பதாகவும், இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் தொடங்கும் என்று கூறப்பட்ட நிலையில்
தற்போது இந்த படத்தின் கதை திடீரென மாற்றப்பட்டுவிட்டதாகவும், மேலும் ராகவா லாரன்ஸ் ஜோடியாக நடிக்க இருந்த நயன்தாராவுக்கு பதில் வேறு ஒரு நடிகையை நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.