ஆக்சன் காட்சிகளில் நடித்தபோது குழந்தையாகவே மாறிபோனேன்! சல்மான்கான் சுவாரசிய தகவல் !!
சல்மான் கான் , காத்ரீனா கைஃப் ஜோடிசேர்ந்து நடித்துள்ள புதிய படத்துக்கு ‘டைகர் 3 என பெயரிடப்பட்டுள்ளது.வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ள இப்படத்தை மனீஷ் ஷர்மா இயக்கியுள்ளார்.
ஏக் தா டைகர், டைகர் ஜிந்தா ஹி, வார், பதான், உள்ளிட்ட படங்களை தயாரித்த யஷ்ராஜ் பிலிம்ஸ் தற்போது டைகர் 3 படத்தை தயாரித்து வருகிறது வரும் 16 ம் தேதி இப்படத்தின் டிரைலர் வெளியாக உள்ளது.
இப்படம் குறித்து இப்படத்தின் நாயகன் சல்மான் கான் கூறுகையில்,”டைகர் 3 படக்குழு, இந்திய சினிமாவில் இதுவரை பார்த்திராத வகையில் பல விஷயங்களை செயல்படுத்தி இருக்கிறது.
அதிரடியாக உருவாக்கப்பட்ட இப்படத்தின் ஆக்சன் காட்சிகளில் நான் நடித்தபோது ஒரு துடிப்பான, ஆர்வம் மிக்க குழந்தையை போலவே மாறிவிட்டேன்.இப்படத்தின் கதை முழுவதும் அந்த நாளை காப்பாற்ற ‘சூப்பர் ஏஜென்ட் டைகர்’ மேற்கொள்ளும் உயிருக்கு ஆபத்தான பணியில் திருப்பங்கள் நிறைந்ததாக இருக்கும்.
இப்படக்குழு முதலில் ‘டைகர் 3’ கதையுடன் வந்தபோது என்னால் நம்ப முடியவில்லை. இது டைகரின் மிகுந்த அபாயகரமான மிஷனாக இருக்கும் என்பதால், கிடைத்த வாய்ப்பை பயன்படுத்துவதற்காக எனது வாழ்க்கையில் மிகப்பெரிய ரிஸ்க்கும் எடுக்கவேண்டி இருந்தது ” என்கிறார்