‘லால் சலாம்’ வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய ‘ரெட் ஜெயண்ட்’ !
ஐஸ்வர்யா ரஜினியின் இயக்கத்தில், ரஜினிகாந்த் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் சிறப்பு வேடத்தில் நடித்துள்ள ’லால் சலாம்’ திரைப்படம் வரும் பொங்கல் திருநாளில் வெளியாகும் என ஏற்கனவே லைக்கா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் இன்று மாலை இந்த படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் ஜீவிதா,தம்பி ராமையா,டைகர் தங்கதுரை செந்தில் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தில் ‘மொய்தீன் பாய்’ எனும் பெயர் கொண்ட கதாபாத்திரத்தில் ரஜினி நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு மும்பை, சென்னை, புதுச்சேரி, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் நடந்து வந்த நிலையில்,சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.. இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
பொங்கல் பண்டிகையை குறி வைத்து ஏற்கனவே சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ மற்றும் சுந்தர்.சியின் ‘அரண்மனை 4’ வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் ரஜினியின் லால் சலாம் படமும் பொங்கல் விடுமுறையை குறி வைத்து வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது