நயன்தாராவின் ‘மண்ணாங்கட்டி’ படப்பிடிப்பு தொடங்கியது!

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக  வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் அடுத்ததாக மண்ணாங்கட்டி சின்ஸ் 1960′ என்று பெயர் வைக்கப்பட்டுள்ள புதிய படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இவருடன் யோகிபாபு, கே.எஸ்.ரவிகுமார், ஷீலா ராஜ்குமார், ரித்விகா, நரேந்திர பிரசாத் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் S . லக்ஷ்மன் குமார்,  இப்படத்தை பெரும் பொருட் செலவில் தயாரிக்கிறார். இணை தயாரிப்பை  A வெங்கடேஷ் மேற் கொள்கிறார்.   டியூட் விக்கி எழுதி, இயக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.
ஏற்கனவே இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பு பெற்ற நிலையில், தற்போது படக்குழுவினர் கொடைக்கானலில் பிரம்மாண்டமான அரங்கம் அமைத்து படப்பிடிப்பை தொடங்கி இருக்கிறார்கள்.