விஜய் நடிப்பில்,லோகேஷ் கனகராஜ் இயக்கதில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் வருகின்ற அக்டோபர் 19-ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில்,இப்படத்திற்கு ஒரு நாளுக்கு ஐந்து காட்சிகள் திரையிட அனுமதி வழங்கியிருந்தது.ஆனால், அதிகாலை காட்சிகளுக்கு அனுமதியில்லை என்றும் காலை 9 மணிக்குத் தான் முதல் காட்சி ஆரம்பிக்க வேண்டும் என்றும் அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டது..
இதை எதிர்த்து இப்படத்தை தயாரித்துள்ள செவன் ஸ்கீரின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று வழக்கறிஞர் கர்னல் கணேசன், நீதிபதி அனிதா சுமந்த் முன்பு ஆஜராகி, லியோ படத்தின் ரசிகர்களுக்கான சிறப்புக் காட்சியை காலை 4 மணிக்கு திரையிட அனுமதிக்க வேண்டும். அதேபோல் காலை 9 மணி என்பதை 7 மணிக்கே திரையிட அனுமதிக்க கோரி வழக்கு தாக்கல் செய்துள்ளோம். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என முறையிட்டார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, வழக்கு விசாரணையை செவ்வாய்க்கிழமை (இன்று) தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், இம்மனு இன்று முதல் வழக்காக நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது மனுவை விசாரித்த நீதிபதி, ‘லியோ’ படம் வெளியாகும் நாளில் அதிகாலை 4 மணி காட்சிக்கு நீதிமன்றம் அனுமதி அளிக்க முடியாது என்று தெரிவித்தார்.
9 மணிக்கு காட்சிக்கு பதிலாக படத்தை 7 மணிக்கு தொடங்க அனுமதி கோரி மனு அளிக்குமாறு பட தயாரிப்பு நிறுவனத்திற்கு உத்தரவிட்ட அவர், இது குறித்த உரிய உத்தரவை பரிசீலித்து நாளை மதியத்துக்குள் தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.