Friday, May 15, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

கனத்த இதயத்துடன் கமல்ஹாசனை பிரிகிறேன்!-கவுதமி பரபரப்பு அறிக்கை!!

admin by admin
November 1, 2016
in News
425 5
0
595
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

நடிகை கவுதமி நடிகர் கமல்ஹாசனை பிரிந்தார் இதன் மூலம் அவர்களின் 13 ஆண்டுகால வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.papanasam-press-meet-stills-31 இது குறித்து கவுதமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “வாழ்க்கையும் சில முடிவுகளும்

ஆழ்ந்த வருத்தத்துடனும், மிகுந்த கனத்த இதயத்துடனும் தான் நானும் திரு. கமல் ஹாசன் அவர்களும் இப்பொழுது ஒன்றாக இல்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன். 13 வருட காலம் அன்னியோனியமாக ஒன்றாக இருந்து விட்டப் பிறகு, நான் எடுக்க வேண்டியிருந்த இந்த முடிவு, என்னை முற்றிலும் நிலைகுலைய வைத்த ஒரு முடிவு. மிகுந்த ஆழமான உறவில் இணைந்திருக்கும் எவருக்கும் தங்கள் பாதைகள் திரும்பி வரவே முடியாத அளவிற்கு விலகி விட்டன என்பதையும், அவர்களுக்கு தற்சமயம் இருக்கும் தெரிவுகள், அவர்களது கனவுகளை விட்டு கொடுத்து வாழ்வதோ அல்லது தங்கள் தனிமையின் உண்மையை உணர்ந்து கொண்டு தொடர்ந்து தனியே பயணிப்பதோ தான் என்பதை உணர்ந்து ஏற்றுக் கொள்வது சுலபமான விஷயம் இல்லை.gauthami-9 இந்த உண்மையை புரிந்து கொள்ள எனக்கு வெகு காலம் தேவை பட்டது. ஓரிரண்டு ஆண்டுகளுக்கு பிறகே என்னால் இந்த மனதை முறிக்கும் உண்மையை ஏற்றுக் கொண்டு இன்று நான் எடுத்துள்ள இந்த முடிவுக்கு வர முடிந்தது.
இந்த தருணத்தில் என்னுடைய நோக்கம் பரிவை தேடுவதோ, பழி சுமத்துவதோ அல்ல. மாற்றம் என்பது வாழ்வில் இன்றியமையாத ஒன்று என்று நான் எனது வாழ்க்கையின் மூலம் உணர்ந்து கொண்டுள்ளேன். மேலும் மனித இயல்பு இந்த மாற்றத்தை ஒவ்வொரு தனி மனிதனுக்கும் ஒவ்வொரு விதமாக கொண்டு சேர்க்கும் என்பதையும் தெரிந்து கொண்டுள்ளேன். இந்த மாற்றங்கள் எல்லாமே நாம் விரும்புவதாகவோ, எதிர்ப்பாற்பதாகவோ இருக்காது என்பதையும் புரிந்து கொண்டேன். kamal3ஆனால் இந்த புரிதல் மட்டுமே ஒரு உறவில் இணைந்திருக்கும் இருவரிடையே வெவ்வேறு முன்னுரிமைகள் குறித்து வேறுபாடு இருப்பதினால் ஏற்படும் தாக்கத்தை எந்த வகையிலும் குறைக்காது.. எனது வாழ்க்கையின் இந்த காலகட்டத்தில் தனியே தொடர்வது என்ற இந்த முடிவை எடுப்பது என்பது எனக்கு மட்டும் அல்ல, எந்த பெண்ணுக்குமே மிகவும் கடினமான ஒரு விஷயம். ஆனால் எனக்கு இதை செய்வது அத்தியாவசியமாகி விட்டது. ஏனென்றால் நான் முதலில் ஒரு தாய் என்பதையும் எனது முதல் கடமை எனது பிள்ளைக்கே என்பதையும் முழுவதுமாக உணர்ந்திருக்கிறேன். எனது கடமையை நான் சரிவர செய்வதற்கு நான் எனக்குள் அமைதியை உணர்வது மிகவும் அவசியம் என்பதையும் உணர்கிறேன்.
நான் திரைத்துறைக்கு வருவதற்கு முன்பே திரு. கமல் ஹாசன் அவர்களின் மிக பெரிய விசிறியாக இருந்தேன் என்பது பெரிய ரகசியம் ஒன்றுமில்லை. நான் இப்பொழுதும் அவரது அசாத்திய திறமையையும் சாதனைகளையும் ஆராதிக்கிறேன். அவருக்கு சோதனைகள் பல வந்த போதும் நான் அவருக்கு துணையாக நின்றதை நான் மிகவும் அறிய தருணங்களாக கருதுகிறேன். அவரது திரைப்படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியதில் நான் அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டேன். அவரது கற்பனை நோக்கிற்கு உதவி செய்ய முடிந்ததை நான் மிகவும் பெருமையாக கருதுகிறேன். இன்று வரை அவர் சாதித்ததின் கூடவே அவர் அவரது நேயர்களுக்கு இன்னும் அதிகமாக கொடுக்கப் போகிறார் என்பதையும் உணர்கிறேன். அவரது வருங்கால சாதனைகளை கைத்தட்டி வரவேற்க நானும் காத்திருக்கிறேன்.
என் வாழ்க்கையின் இந்த மிக பெரிய தீர்மானத்தை உங்களுடன் நான் பகிர்ந்து கொள்வதன் காரணம், நான் இதுவரை, என்னால் முடிந்தவரை, உங்களிடையே மிகுந்த கண்ணியத்துடனும் கௌரவத்துடனும் வாழ்ந்து வந்திருக்கிறேன் என்பதும், நீங்கள் அனைவரும் என் வாழ்க்கை பயணத்தின் ஒரு முக்கிய பகுதியாக இருந்திருக்கிறீர்கள் என்பதும் தான். கடந்த 29வருடங்களில் உங்களிடமிருந்து மிகுந்த அன்பையும் ஆதரவையும் பெற்று இருக்கிறேன். எனது வாழ்வின் மிகவும் இருண்ட மற்றும் வலி மிகுந்த தருணங்களில் நீங்கள் என்னுடன் இருந்ததற்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.
அன்புடன்
கௌதமி. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

You might also like

மீரா கதிரவனின் ‘ஹபீபி’ திரைப்படத்திற்கு ‘யூ’ சான்றிதழ்!

சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸின்  ‘வேலும் மயிலும்’ ஆல்பம்!

‘சைலண்ட் இன்ஃபுளூயன்சர்’ ஆல்பம் வெளியீடு!

admin

admin

Related Posts

‘சைலண்ட் இன்ஃபுளூயன்சர்’ ஆல்பம் வெளியீடு!
News

மீரா கதிரவனின் ‘ஹபீபி’ திரைப்படத்திற்கு ‘யூ’ சான்றிதழ்!

by admin
May 14, 2026
‘சைலண்ட் இன்ஃபுளூயன்சர்’ ஆல்பம் வெளியீடு!
News

சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸின்  ‘வேலும் மயிலும்’ ஆல்பம்!

by admin
May 14, 2026
‘சைலண்ட் இன்ஃபுளூயன்சர்’ ஆல்பம் வெளியீடு!
News

‘சைலண்ட் இன்ஃபுளூயன்சர்’ ஆல்பம் வெளியீடு!

by admin
May 14, 2026
ராம்சரணின் ‘பெத்தி’ திரைப்படத்தை ஹொம்பாலே ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!
News

ராம்சரணின் ‘பெத்தி’ திரைப்படத்தை ஹொம்பாலே ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

by admin
May 14, 2026
பாராட்டுக்களைக் குவிக்கும் ‘அங்கீகாரம்’ படத்தின் டிரெய்லர்!
News

பாராட்டுக்களைக் குவிக்கும் ‘அங்கீகாரம்’ படத்தின் டிரெய்லர்!

by admin
May 13, 2026

Recent News

‘சைலண்ட் இன்ஃபுளூயன்சர்’ ஆல்பம் வெளியீடு!

சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸின்  ‘வேலும் மயிலும்’ ஆல்பம்!

May 14, 2026
‘சைலண்ட் இன்ஃபுளூயன்சர்’ ஆல்பம் வெளியீடு!

‘சைலண்ட் இன்ஃபுளூயன்சர்’ ஆல்பம் வெளியீடு!

May 14, 2026
ராம்சரணின் ‘பெத்தி’ திரைப்படத்தை ஹொம்பாலே ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

ராம்சரணின் ‘பெத்தி’ திரைப்படத்தை ஹொம்பாலே ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

May 14, 2026
பாராட்டுக்களைக் குவிக்கும் ‘அங்கீகாரம்’ படத்தின் டிரெய்லர்!

பாராட்டுக்களைக் குவிக்கும் ‘அங்கீகாரம்’ படத்தின் டிரெய்லர்!

May 13, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?