மறக்க முடியாத சந்தோஷத்தை கொடுத்த ‘கூழாங்கல்’ !-விக்னேஷ் சிவன்
நடிகை நயன்தாரா – விக்னேஷ் சிவன் இணைந்து தயாரித்துள்ள முதல் படம் கூழாங்கல் . அறிமுக இயக்குநர் வினோத்ராஜ் இயக்கியுள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். உலகின் பல்வேறு திரைப்பட விழாவில் கலந்து கொண்டு விருதுகளை குவித்து வரும் இப்படம் .ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
இப்படம் குறித்து இயக்குநரும் தயாரிப்பாளருமான விக்னேஷ் சிவன் பேசுகையில், “இது எங்கள் தயாரிப்பில் முதல் படம். ரௌடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலமாக வித்தியாசமான, புதுமையான நல்ல படங்களை தயாரிக்கலாம் என்று நினைத்து துவங்கினோம். அப்போது இந்த படத்தை பார்த்தோம். இந்த படத்தை சர்வதேச திரைப்பட விழாக்களில் கொண்டு சேர்த்தால் சர்வதேச அளவில் ரசிகர்கள் இந்த மாதிரியான படங்களை கொண்டாடுவார்கள்.
நிறைய விஷயங்கள் புதிதாகவும், மனநிறைவும் இருக்கும். கேன்ஸ் திரைப்பட விழா போன்ற மற்ற சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு செல்லும் போது அவர்களின் சினிமா ரசனை வேறு மாதிரி இருக்கும். அந்த மாதிரியான திரைப்படங்களை தயாரிக்க வேண்டும் என்பது என் தனிப்பட்ட ஆசை. எங்களுக்கு அதிகமான பெருமையை ஈட்டு கொடுத்த படம் கூழாங்கல்.நாங்கள் எந்த திரைப்பட விழாக்களுக்கு அனுப்பினாலும் கூழாங்கல் திரைப்படம் ஏதாவது ஒரு விருதை வென்றுவிடும்.
அதிலும் ஆஸ்கருக்கான தேர்வில் இந்த படம் பரிந்துரையில் இருந்தது மிகவும் சந்தோஷம். வாழ்நாளில் மறக்க முடியாத சந்தோஷத்தை கூழாங்கல் கொடுத்தது. கேன்ஸ் ஃபிலிம் பெஸ்டிவலில் கூட என்னை கூழாங்கல் தயாரிப்பாளர் என்று தான் அறிமுகப்படுத்தி கொண்டேன்.இந்த படத்தை மணிரத்னம் வெற்றிமாறன் ஆகியோர் பாராட்டினர்.
இப்படத்தின் மூலம் எங்களுக்கு கிடைத்த பாராட்டுக்கள் மற்றும் அனுபவங்களை மறக்க முடியாது. இதை தியேட்டர்களில் கொண்டு வர வேண்டும் என்று ஆசை. ஆனால் சில காரணங்களால் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது இவ்வாறு அவர் பேசினார்