‘கடந்த 2016-ல் வெளியான ‘உனக்குள் நான்’,2017-ல் வெளியான ‘லைட்மேன்’ ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து வெங்கடேஷ் குமார்.ஜி திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ள புதிய படம், ‘எ ஹோம் அவே ஃப்ரம் ஹோம்’.
இப்படத்தில் ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தில் நடித்த பிரெஞ்ச் நடிகை மனிசா டெய்ட், அனீஷ், நிழல்கள் ரவி, ஸ்ரீ ரஞ்சனி முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை சஹாரா ஏஷியா புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் உமா பாலு கதை எழுதி தயாரித்துள்ளார் .பிரபு ராமகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார், எழில் துரை இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ள வெங்கடேஷ் குமார்.ஜி கூறியதாவது,,”ஜெர்மனியைச் சேர்ந்த கரோலின் என்ற ஆராய்ச்சியாளர் பழங்குடியினர் குறித்து ஆராய்ச்சி தமிழ்நாட்டுக்கு வருகிறார். அவருக்கு ஆதிவாசி இளைஞனுடன் காதல் ஏற்படுகிறது.
அதனால் அவர் வாழ்வில் ஏற்படும் திருப்பங்களை இப்படம் சொல்கிறது.இப்படத்தின் படப்பிடிப்புகளை கேரளாவில் உள்ள வயநாடு மலையில் வசிக்கும் மலைஜாதி மக்களின் குடியிருப்புகளில் நடத்தினோம்.அங்குள்ள பழங்குடி மக்களையும் இதில் நடிக்க வைத்துள்ளோம். நார்வே பட விழாவில் இந்தப் படம் 4 விருதுகளை வென்றுள்ளது. கான் திரைப்பட விழாவுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.இப்படத்தின் வெளியீட்டுத்தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்கிறார்.












