அறிமுக இயக்குநர் சாய்பரத் இயக்கி இருக்கும் ‘ரம்’ திரைப்படம்…’வி ஐ பி’ புகழ் ஹ்ரிஷிகேஷ், ‘சூது கவ்வும்’ புகழ் சஞ்சிதா ஷெட்டி, மியா ஜார்ஜ், நரேன் மற்றும் விவேக் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘ரம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் உள்ள ‘ஹயாத்’ ஹோட்டலில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக, ‘ஸ்டுடியோ கிரீன்’ ஞானவேல் ராஜா, ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா மற்றும் நடன இயக்குனர் காயத்ரி ரகுராம், நடிகர் ஆதவ் கண்ணதாசன்,இயக்குநர் சாய் பரத், இசையமைப்பாளர் அனிரூத், ஹ்ரிஷிகேஷ், சஞ்சிதா ஷெட்டி, நரேன், நடிகர்வி வேக், அம்ஜத், அருண் சிதம்பரம், பாடலாசிரியர்கள் மதன் கார்க்கி, விவேக் வேல்முருகன் மற்றும் ஒளிப்பதிவாளர் விக்னேஷ் வாசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் நடிகர் விவேக் பேசியதாவது,”ரம் திரைப்பட குழுவினரை போன்ற இளம் கூட்டணியோடு பணியாற்றியது, எனக்கு புது உற்சாகத்தை அளித்ததோடு மட்டுமில்லாமல், என்னை மீண்டும் இளமையாகவும் மாற்றி இருக்கின்றது….நம்முடைய இளைஞர்களின் மனதை இசையால் கவருவது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை…. ஆனால் அதை தன்னுடைய மனதை வருடும் இசையால் செய்திருக்கிறார் அனிரூத். இளையராஜா என்னும் இசை கடலில் கண்டெடுத்த முத்து தான் அனிரூத்…” என்று கூறினார் .