கமல்ஹாசன் மணிரத்னம் கூட்டணியில் உருவாகும்,“Thug Life”!
.
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நாயகன் திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணி 37 ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் கமலின் 234 வது படத்துக்காக இணைந்துள்ளது உலகம் முழுவதிலும் உள்ள கமல் ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது. இந்நிலையில், ‘கே.எச் 234’ படத்தின் டீசரை கமல்ஹாசனின் பிறந்தநாள் ஸ்பெஷலாக இப்படத்தின் ‘படப்பிடிப்பு’ மேக்கிங் டீசரை படக்குழு ஏற்கனவே வெளியிட்டுள்ளது.இந்நிலையில் இப்படத்தின் தலைப்பு ஆக்ஷன் மோடில் உருவான டீசராக இன்று மாலை 5 மணிக்கு வெளியானது
இந்த படத்துக்கு “Thug Life” என மிரட்டலான தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து க்ளிம்ப்ஸ் வீடியோ ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது.இப்படத்தில் நடிகர் கமலுடன் இந்த படத்தில், மலையாள நடிகர் துல்கர் சல்மான், நடிகை திரிஷா, நடிகர் ஜெயம்ரவி ஆகியோர் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த போஸ்டர் வீடியோவில் கமல்ஹாசன், “என் பெயர் ரங்கராய சக்திவேல் நாயக்கன் காயல் பட்டினத்துக்காரன்.பொறக்கும்போதே எந் தலையில எழுதி வச்சிட்டாவ சக்திவேல் நாயக்கன் கிரிமினல் யாக்குசான்னு. யாகூசான்னா ஜப்பான் மொழியில கேங்ஸ்டார்னு சொன்னாவ. என்று கர்ஜித்தபடியே களத்தில் தனியொரு ஆளாக கமல்ஹாசன் எதிரிகளை பந்தாட தயாராகிறார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.