கலைஞர் நூறு’ விழாவில் உலகநாயகன்!

தமிழ் திரையுலகம் சார்பில் வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள ‘கலைஞர் நூறு’ விழாவில் கலந்து கொள்ள மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவரும்,நடிகருமான கமல்ஹாசனை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.ராமசாமி, செயலாளர் ஆர்.ராதாகிருஷ்ணன், நடிகர் சங்க தலைவர் நாசர், துணைத் தலைவர் பூச்சி முருகன், பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் விழா குழு சார்பில் நேரில் சென்று அழைப்பு விடுத்தனர்.அடுத்ததாக ரஜினிகாந்தையும் சந்திக்க உள்ளனராம்.