பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண் நடிப்பில், ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம் ‘பார்க்கிங்’. இப்படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக இந்துஜா நடித்துள்ளார். இவர்களுடன் எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளவரசு உள்பட பலர் நடித்துள்ளனர்.
திரில்லர் டிராமா ஜானரில் உருவாகியுள்ள இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்துள்ளார்.இப்படத்தின் டிரைலர் இன்று காலை வெளியாகியுள்ளது.
இப்படம் குறித்து நாயகன் ஹரீஸ் கல்யாண் பேசுகையில்,”இயக்குனர் சொன்ன இந்த கதையை கேட்டவுடன்,’அடடா, நமக்கும் இது நடந்திருக்கே’ என சின்ன வயது சம்பவங்களை எனக்கு நினைவூட்டியது. பார்க்கிங் சம்பந்தமாக நிறைய உண்மை சம்பவங்களை தேடிய போது, கொலையும் நடந்திருக்கு.
இந்த படத்தில் எனக்கும் எம் எஸ் பாஸ்கருக்கும் இடையே பார்க்கிங் பிரச்சனை வருகிறது. அதற்காக இரண்டு பேரும் எந்த அளவிற்கு செல்கிறோம் என்பது தான் இப்படத்தின் கதை .என்கிறார்.இப்படம் வரும் டிசம்பர் 1-ம் தேதி வெளியாகிறது












