‘கலைஞர் நூறு’ விழா ரஜினி-கமலுக்கு அழைப்பு!

மறைந்த திமுக தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை கொண்டாட தென்னிந்திய நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் உள்ளிட்ட 24 சங்கங்களின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள ‘கலைஞர் நூறு’ விழாவில் கலந்து கொள்ள நடிகர் ரஜினிகாந்தை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.ராமசாமி, செயலாளர் ஆர்.ராதாகிருஷ்ணன்,நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி முருகன், ஆகியோர் விழா குழு சார்பில் நேரில் சென்று அழைப்பு விடுத்தனர்.

முன்னதாக நடிகர் கமலஹாசனையும் சந்தித்து கலைஞர் 100 விழாவில் கலந்து கொள்ளவும் அழைப்பு விடுத்தனர். இருவரும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உறுதி அளித்திருப்பதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.