சுதீர் பாபு- மாள்விகா ஷர்மா,நடிப்பில் உருவான ‘ஹரோம் ஹரா’.டீசர் வெளியானது!
ஸ்ரீ சுப்ரமண்யேஷ்வரா சினிமாஸ் சார்பில் எஸ்.எஸ்.சி. தயாரித்திருக்கும் படம், ‘ஹரோம் ஹரா’. இதில் கதாநாயகனமாக சுதீர் பாபு நடிக்கிறார். இவருடன் மாள்விகா ஷர்மா, சுனில், ஜெ.பி. அக்ஷரா கவுடா, லக்கி லக்ஷமன், ரவி கலே , அர்ஜூன் கவுடா உள்பட பலர் நடித்துள்ளனர்..ஞானசேகர் துவாரகா இயக்குகிறார்.
1980 காலக்கட்டத்தில் நடைபெறுவது போன்ற கதையம்சம் கொண்ட இப்படத்தின் டீசரை பிரபாஸ், மம்மூட்டி, டைகர் ஷெராஃப், விஜய் சேதுபதி மற்றும் கிச்சா சுதீப் ஆகியோர் தமிழ்,தெலுங்கு, மலையாளம், மற்றும் இந்தி,கன்னட மொழிகளில் வெளியிட்டனர்.
இப்படத்தின் டீசர் முழுக்க அதிரடி ஆக்ஷன் காட்சிகளும், மாஸ் சம்பவங்களும் இடம்பெற்று உள்ளன.பல எதிரிகள் தனது வீழ்ச்சிக்காக காத்திருக்கும் சூழலில், சாதாரண மனிதனாக இருந்து, நகரின் சக்திவாய்ந்த நபர்களில் ஒருவராக உருவெடுக்கும் வகையில் சுப்ரமணியம் என்ற கதாபாத்திரத்தில் சுதீர் பாபு நடித்துள்ளார்.
இவருக்கு ஜோடியாக மாள்விகா ஷர்மா நடித்துள்ளார். மேலும் லக்கி லக்ஷ்மன், ரவி கலே மற்றும் அர்ஜூன் கௌடா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இப்படத்தின் ஒளிப்பதிவை அரவிந்த் விஸ்வநாதன் கவனிக்க,சைத்தன் பரத்வாஜ் பின்னணி இசையமைத்துள்ளார்.