தமிழ்த்திரையுலகில் த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தின் இயக்குநராக அறிமுகமானவர் ஆதிக் ரவிச்சந்திரன். தொடர்ந்து சிம்புவை வைத்து அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தை இயக்கினார். இதையடுத்து விஷால் எஸ்.ஜே சூர்யா நடிப்பில் மார்க்க ஆண்டனி படத்தை இயக்கினார்
இப்படம் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்துள்ளது.இந்நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் பிரபுவின் மகளான ஐஸ்வர்யாவை காதலிப்பதாகவும் இருவரும் பெற்றோரின் சம்மதத்தோடு விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போவதக்க தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஐஸ்வர்யா ஏற்கனவே அவரது உறவினர் குணால் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர்.என்பது குறிப்பிடத்தக்கது.இது குறித்த அறிவிப்பு அடுத்த இரண்டு நாட்களில் அதிகாரபூர்வமாக வெளியாகும் என்கிறார்கள்.