‘மார்க் ஆண்டனி’ படத்தை தொடர்ந்து நடிகர் விஷால், தற்போது இயக்குநர் ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் நடித்து வருகிறார் . ‘தாமிரபரணி’, ‘பூஜை’ஆகிய படங்களைத் தொடர்ந்து நடிகர் விஷால் -இயக்குனர் ஹரி கூட்டணி மீண்டும் 3 வது முறையாக இணைந்துள்ளது.
இதில்,விஷாலுடன் பிரியா பவானி சங்கர், சமுத்திரகனி, கவுதம் மேனன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தேவி பிரசாத் இசை அமைக்கும் இந்தப் படத்துக்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். ‘விஷால் 34′ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்துக்கு தற்போது ரத்னம்’ என பெயரிடப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகியுள்ள சுமார் 2 நிமிடங்கள் ஓடும் இந்த டீசரில், லாரியில் வந்து இறங்கும் விஷால், வில்லன் ஒருவரின் தலையை வெட்டி கையில் பிடிக்கும் ரத்தம் தெறிக்கும் காட்சியுடன், ‘கண்ணீர் செந்நீராக.. குரோதம் குருதியாய்… உக்ரம் உதிரமாய்.. ரணங்கள் ரத்தமாய்…” போன்ற வார்த்தைகள் இடம்பெற்றுள்ளது.
இப்படம் அடுத்த வருட கோடை விடுமுறையில் வெளியாகும் எனவும் படக்குழு அறிவித்துள்ளது.இது குறித்து நடிகர் விஷால் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,” இது என்னுடைய 34ஆவது படம். ரத்னம் படத்தின் முதல் ஷாட்டை பகிர்வதில் மகிழ்ச்சி. இயக்குநர் ஹரியுடன் மூன்றாவது முறையாக இணைகிறேன்.
ராக்ஸ்டார் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்தின் இசையில் முதன்முறையாக நடிக்கிறேன். இந்தப்படத்தின் ரிலீஸ் ஆனது 2024ஆம் ஆண்டு மே மாதம் இருக்கலாம். உங்களுக்கு இப்படம் பிடிக்கும். கஷ்டப்பட்டு செய்த பணி தோற்காது. கடவுள் ஆசிர்வதிக்கட்டும்’இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.












