விஜய் சேதுபதி-மிஸ்கின் கூட்டணியில் வெற்றிமாறன்?
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் ட்ரெய்ன் படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் மிஷ்கின். இப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். இப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கடந்த இரு தினங்களுக்கு முன்னர் படக்குழு வெளியிட்டது.
இந்நிலையில், விஜய் சேதுபதி, மிஷ்கின் இருவருக்காகவும் இப்படத்தில் இயக்குநர் வெற்றிமாறன் கேமியோ ரோலில் நடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
லோகேஷ் கனகராஜ் உள்பட சில இயக்குநர்களும் வெற்றிமாறனை தங்களது படங்களில் நடிக்க வைக்க முயற்சித்தனர். என்பது குறிப்பிடத்தக்கது