‘ஆளவந்தான்’ புதிய டிரெய்லர் வெளியானது!
கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் கடந்த 2001ம் ஆண்டு சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கமல்ஹாசன், ரவீனா டாண்டன் மற்றும் மனிஷா கொய்ராலா உள்ளிட்ட பலர் நடித்த ஆளவந்தான் திரைப்படம் வெளியானது.
இந்நிலையில்,இப்படம் மீண்டும் 22 ஆண்டுகள் கழித்து நவீன டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் வரும் டிசம்பர் 8ம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது.
சமீபத்தில் வெளியான கமலின் வேட்டையாடு விளையாடு ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வசூல் வேட்டை நடத்திய நிலையில், ஆளவந்தான் படமும் ஹிட் அடிக்கும் என்கிறார்கள்.
இந்நிலையில்,தற்போது இப்படத்தின் புதிய டிரெய்லர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.