கமலின் ‘தக் லைப்’ படத்தில் கவுதம் கார்த்திக் !

 

விக்ரம் படத்தை தொடர்ந்து கமல்,நடித்து வரும் இந்தியன்-2 படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது.இப்படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படத்திலும், வினோத் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகின்றார்.பிரபாஸ் நடித்து வரும் ‘கல்கி’ படத்தில் வில்லன் வேடத்திலும் நடித்து வருவதோடு, பல படங்களை தயாரித்தும் வருகிறார்..

இந்நிலையில் நாயகன் படத்திற்கு பிறகு 35 வருடங்கள் கழித்து கமல் மற்றும் மணிரத்னம் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இப்படத்திற்கு ‘தக்ஃலைப்’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் ‘டீசர்’ வீடியோ சமீபத்தில் வெளியாகி பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.

நடிகை திரிஷா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் ஏற்கனவே முன்னணி நடிகர்களான ஜெயம் ரவி மற்றும் துல்கர் சல்மான் இணைந்துள்ள நிலையில் தற்போது இவர்களின் கூட்டணியில், கவுதம் கார்த்திக் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளதாகவும் இது குறித்த அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

அடுத்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்க உள்ள இப்படத்துக்கு ஏஆர் ரகுமான் இசை அமைக்க உள்ளார். ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார்.