நிர்வாணமாக பிறந்த நாள் கொண்டாடிய வில்லன் நடிகர்!
தமிழில் கடந்த 2011ம் ஆண்டு ஜூனியர் என்டிஆர் நடித்த சக்தி எனும் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் வித்யுத் ஜமால். தொடர்ந்து 2012ம் ஆண்டு ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால் நடித்த துப்பாக்கி மற்றும் அஜித்தின் பில்லா 2 உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.
வில்லன் நடிகராக அறிமுகமாகிதற்போது கதாநாயகனாகவும் சில இந்தி படங்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில் வித்யுத் ஜமால் இன்று தனது பிறந்தநாளை ஒட்டுத்துணி இல்லாமல் முழு நிர்வாணமாக இமய மலையில் உள்ள காடுகளிலும் நதிகளிலும் ஆதிவாசி மனிதனை போல கொண்டாடியுள்ளார்
இமய மலையின் காடுகளில் அடுப்பை பற்ற வைத்து சமைக்கும் புகைப்படங்களையும், நதியில் இறங்கி குளிக்கும் புகைப்படங்களையும் தனது சமூக வலைதளத்திழும் வெளியிட்டு அனைவருக்கும் அதிர்ச்சியளித்துள்ளார்