நயன்தாராவுக்கு அப்பாவாக நடிக்கும் சீமான்!
இயக்குனர் விக்னேஷ் சிவன் தற்போது பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கும் ‘எல்ஐசி’ படத்தை இயக்கிவருகிறார். கீர்த்தி ஷெட்டிகதாநாயகியாக நடிக்கிறார்.
இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு அக்காவாக நயன்தாரா நடிப்பதாகவும் தகவல்கள் வெளியான நிலையில்.அடுத்த அதிரடியாக பிரதீப் ரங்கநாதன்,நயன்தாரா ஆகியோருக்கு தந்தையாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நடிக்க கமிட்டாகியிருப்பதாக வெளியாகியுள்ளது.
சினிமாவிலிருந்து ஒதுங்கி அரசியலில் தீவிர கவனம் செலுத்தி வரும் இயக்குனர்,நடிகர், சீமான் தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க இருக்கும் தகவல் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.இந்த படம் விவசாயிகள் குறித்த பிரச்சனையை பேசும் படமாக இருக்கும் என்றும் சீமான் ஒரு விவசாயியாக நடித்திருக்கிறார் என்றும்
இந்த படத்தில் தந்தை மகள் மற்றும் தந்தை மகன் இடையே நடக்கும் தினசரி போராட்டம் குறித்த காட்சிகள் அதிகம் இருக்கும் என்கிறது படத்தரப்பு..இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் எஸ்/ஜெ சூர்யா,இயக்குனர் மிஸ்கின் ஆகியோர் நடிக்கின்றனர்.