கடந்த 1986 ஆகஸ்ட் 15ல் விஜயகாந்த், சரிதா, சசிகலா, அருண் பாண்டியன், வாகை சந்திரசேகர், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், கார்த்திக், ஸ்ரீவித்யா, தேங்காய் சீனிவாசன், டிஸ்கோ சாந்தி உள்ளிட்டோர் நடிப்பில் திரைக்கு வந்து பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் ‘ஊமை விழிகள்’.
இப்படத்தின் மூலமாக திரைப்படக் கல்லூரி மாணவர்களின் வாழ்க்கையில் பெரிய திருப்புமுனையே ஏற்பட்டது என்று கூறலாம்.விஜயகாந்தின் திரையுலக வாழ்க்கைக்கு பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தி தந்த இப்படத்தை ஆர். அரவிந்தராஜ் இயக்கினார். ஆபாவாணன் எழுதி தயாரித்தார்.
இந்நிலையில்,சமீபத்
இது குறித்து ஆபாவாணனிடம் கேட்டபோது, ஊமை விழிகள் 2,3 மற்றும் பாகங்கள் படங்கள் உருவாக இருக்கிறது இதில் ஏ.ஐ தொழில் நுட்பத்தின் உதவியுடன் மீண்டும் விஜய் காந்தின் சில காட்சிகளில் உருவாக்க திட்டமிட்டுளோம் மேலும் இதில் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரனை முக்கிய வேடத்தில் நடிக்க வைக்க இருக்கிறோம் நடிகர் சத்யராஜ் இதில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் விரைவில் மற்ற நடிகர் நடிகைகள் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்கிறார்