நடிகர் சங்கம் சார்பில் விஜயகாந்துக்கு இரங்கல் கூட்டம்!
தேமுதிக நிறுவன தலைவரும் , நடிகருமான கேப்டன் விஜயகாந்த் உடல் நலக் குறைவு காரணமாக கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி காலமானார். பின்னர் அடுத்த நாள் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்தின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.இந்நிலையில் இன்று காலை விஜயகாந்தின் நினைவிடத்தில் நடிகர்கள் சிவக்குமார் மற்றும் கார்த்தி அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் அங்கிருந்த செய்தியாளர்கள் மத்தியில் நடிகர் கார்த்தி கூறுகையில்,”கேப்டன் இறுதி சடங்கில் கலந்து கொள்ள முடியாமல் போனது என் வாழ்நாள் முழுவதும் குறையாகவே இருக்கும் என உருக்கமாக தெரிவித்த அவர் தொடர்ந்து கூறுகையில்,வருகின்ற ஜனவரி 19ஆம் தேதி மாலை 5 மணிக்கு சென்னை தேனாம் பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடிகர் சங்கம் சார்பில் மறைந்த விஜயகாந்துக்கு இரங்கல் கூட்டம் நடைபெறும் என அறிவித்த அவர் அந்நிகழ்வில் விஜயகாந்த் புகழ் நிலைத்து நிற்கும் வகையில் அறிவிப்பு வெளியாகும் என கூறினார்.