பிலிம்பேர் விருதுகளில் ஆதிக்கம் செலுத்தும் ஷாருக்கான்!
69வது ஃபிலிம்பேர் விருது விழாவை, நடிகர் ஷாருக்கான் முழுமையாக ஆக்ரமித்துள்ளார் . பதான், ஜவான் மற்றும் டங்கி ஆகிய பிளாக்பஸ்டர்களான பதான் மற்றும் ஜவான் திரைப்படங்கள் இப்போது, 69வது ஃபிலிம்பேர் விருதுகளில் சிறந்த திரைப்படம் என்ற பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஜவான் மற்றும் டங்கி படத்திற்காக ஷாருக்கான் சிறந்த நடிகர் பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். மேலும், டங்கி படத்திற்காக சிறந்த நடிகர் (விமர்சகர்கள்) பிரிவிலும் சிறந்த துணை நடிகர் பிரிவிலும் ஷாருக்கான் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.
பதான் திரைப்படம் சிறந்த இயக்குநர் பிரிவிலும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சிறந்த இயக்குநர் பிரிவில், ஜவான் திரைப்படத்திற்காக அட்லீ மற்றும் பதான் படத்திற்காக சித்தார்த் ஆனந்த் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். தற்போது ஷாருக்கான் எந்தெந்த பிரிவுகளில் விருதுகளை வெல்வார், குறிப்பாக எந்தப் படத்திற்காக வெல்வார் என்பது தான் இப்போதைய பேசுபொருளாகி உள்ளது .